அடுத்த அதிரடி... இனி துப்பாக்கி வைத்து சீன் போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? மக்களவையில் சூடான அமித்ஷா..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2019, 5:27 PM IST
Highlights

 தற்போதைய சூழலில் காவல் துறையினரை அழைத்த அடுத்த 30 நிமிடத்தில் அவர்கள்  சம்பவ இடங்களில் இருப்பார்கள்.  எனவே  மக்கள் ஆயுதங்களை  கையிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார். 
 

ஆயுத திருத்த மசோதா  கடந்த  திங்களன்று நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டது .  உரிமம் பெற்று ஆயுதம் வைத்துள்ளவர்கள் மூலமாக நடக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை  கட்டுப்படுத்தும்  வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது .  இந்நிரையில் திங்கட்கிழமை கீழ் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

இந்த மசோதாவில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும்,  திருமண விழாக்கள்,  பொது நிகழ்ச்சிகள் , மற்றும்  மக்கள் கூடும் இடங்கள்,  திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் கேளிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும்  ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதுதவிர சில புதிய குற்றங்களும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதா குறித்து விளக்கமாக தெரிவித்தார்.  தற்போதைய சூழலில் காவல் துறையினரை அழைத்த அடுத்த 30 நிமிடத்தில் அவர்கள்  சம்பவ இடங்களில் இருப்பார்கள்.  எனவே  மக்கள் ஆயுதங்களை  கையிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

அனுமதி பெற்ற ஆயுதங்கள் காரணமாக துப்பாக்கிச்சூட்டில் யாரும் கொல்லப்படுவதில்லை என யாராலும் சொல்ல முடியாது என்றார் ,  மேலும் அவர் அளித்த தகவலின் கடந்த 2011ம் ஆண்டில் உத்திரபிரதேசத்தில் 191 பேரும் ,  பீகாரில் 12 பேரும் ,  ஜார்க்கண்டில் 14 பேரும் உரிமம் பெற்ற ஆயுதங்களால் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.   ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உரிமம் வழங்க உரிமை உண்டு ,  அதாவது மூன்று ஆண்டுகளில் இருந்து ஆயுதம் வைத்துக்கொள்வதற்கான உரிமைக்காலம்  ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் . 
 

click me!