சிவப்பான, அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்... கட்சித் தொண்டர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ. யோசனை!

By Asianet TamilFirst Published Aug 8, 2019, 6:49 AM IST
Highlights

‘ஜம்மு காஷ்மீரில் ஒரு சென்ட் நிலம் வாங்க ஆசை’, ‘காஷ்மீரில் தொழில் தொடங்க ஆசை’ என்றெல்லாம் பாஜகவினர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி பாஜக தொண்டர்களுக்கு சர்ச்சையான யோசனை ஒன்றை வழங்கியிருக்கிறார் உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான விக்ரம் சிங் சைனி. 

காஷ்மீரில் உள்ள சிவப்பான அழகான பெண்களை பாஜக தொண்டர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பேசியிருக்கிறார்.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அரசிதழையும் வெளியிட்டுள்ளது. இதை பாஜகவினரும் சங்பரிவார் அமைப்புகளும் கொண்டாடிவருகின்றனர். ‘ஜம்மு காஷ்மீரில் ஒரு சென்ட் நிலம் வாங்க ஆசை’, ‘காஷ்மீரில் தொழில் தொடங்க ஆசை’ என்றெல்லாம் பாஜகவினர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.


இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி பாஜக தொண்டர்களுக்கு சர்ச்சையான யோசனை ஒன்றை வழங்கியிருக்கிறார் உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான விக்ரம் சிங் சைனி. ‘சிவப்பான, அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம்” என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.


“ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், அவர்களுடைய உரிமைப் பறிக்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம், காஷ்மீர் பெண்கள் இனி மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களையும் திருமணம் செய்துகொள்ள முடியும். பாஜகவைச் சேர்ந்த இந்து மற்றும் முஸ்லீம் தொண்டர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இனி நாம் ஜம்மு-காஷ்மீர் சென்று அந்த மாநிலத்தில் உள்ள சிவப்பான, அழகான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று பேசினார்.

விக்ரம் சிங்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

click me!