நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு.. பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு..

By Raghupati RFirst Published Feb 8, 2022, 11:42 AM IST
Highlights

நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் ஜெகன்மூர்த்தியை பேச சபாநாயகர்  அழைத்தார். அப்போது பா.ஜனதாவின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் பேச முயன்றார். அப்போது, நயினார் நாகேந்திரன் எழுந்து பேச முயன்றார்.  அப்போது, நேரம் தருகிறேன் என சபாநாயகர் கூறிய போதிலும், நயினார் நாகேந்திரன் பேச முயன்றார். அப்போது, சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார்.

நயினார் நாகேந்திரன், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் கூறினார். அப்போது நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அது எப்படி ஒருமனதாக நிறைவேற்றப்படும் எனக் கூறினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், அவைக்குள் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என பதில் அளித்தார். அதன்பின், ஜெகன் மூர்த்தியை சபாநாயகர் பேச அனுமதி அளித்தார். உடனே, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

click me!