பாஜக தலைவர் கழுத்தை அறுத்துக் கொலை ! மாவோயிஸ்ட்டுகள் வெறித்தனம் !!

Published : Sep 13, 2019, 11:03 PM IST
பாஜக தலைவர் கழுத்தை அறுத்துக் கொலை ! மாவோயிஸ்ட்டுகள் வெறித்தனம் !!

சுருக்கம்

பீகாரில் பாஜக தலைவரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து ஊருக்குள் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும், பொது மக்களின் உதவியுடன் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் சத்கார்வா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் கோடா என்ற பாஜக மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். இவரை மாவோயிஸ்ட்டுகள் நேற்று திடீரென கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் தினேஷ் கோடாவை சத்கார்வா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அந்த இடத்தில் சில துண்டு பிரசுரங்களையும் விட்டுச் சென்றனர். அவற்றில், தினேஷ் கோடா போலீஸ் உளவாளியாக செயல்பட்டதாகவும், தங்கள் பெயரில் மக்களிடம் வரி வசூலித்து வந்ததாகவும் மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை