அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்..? தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்ததால் ரூ77 கோடி இழப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

Published : Jun 05, 2022, 02:17 PM IST
அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்..? தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்ததால் ரூ77 கோடி  இழப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

சுருக்கம்

 கர்ப்பிணிகளுக்கான தமிழக அரசின்  விலையில்லா கிட்டில் ஆவின் பொருட்களுக்கு மாற்றாக தனியார் நிறுவன பொருளை வாங்கியதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்பு சத்து டானிக்குகளை வாங்கியதாலும்  தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.  

ஊட்டச்சத்து டெண்டரில் முறைகேடு

தமிழக அமைச்சர்களின்  சொத்துக்குவிப்பு ஊழல்களை  பட்டியலிட்டு ஆதாரபூர்வமான ஆவணங்கள் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு மீதான பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக குற்றம்சாட்டினார்.  அதில், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா nutrition கிட் , வெறுமனவே nutrition கிட் என இப்போது அழைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள Pro pl health mix எனும் தனியார் நிறுவன பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவன health mix பயன்படுத்தலாம் என பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகள் , மாநில அரசின் திட்டக் குழுவினர் மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஏப்ரல் மாதம் அரசின் நிர்பந்தத்தால் அதை நிராகரித்துள்ளனர்.  கர்ப்பிணிகளுக்காக  2 ஆண்டுகளுக்கு 23லட்சத்து 88 ஆயிரம் கிட்களை தமிழக அரசு வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள் வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட்  நிறுவனத்திற்கு 450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது , ஆவின் பொருளை காட்டிலும் தனியார் health mix விலையானது 60 சதவீதம் அதிகம் என தெரிவித்தார். 

ரூ. 77 கோடி இழப்பு

ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக அரசுக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் 100 கோடி பணம் கைமாறியுள்ளது, அது யாருக்கெல்லாம் சென்றிருக்கும் என்பது இனிதான் தெரிய வரும் என கூறினார்.  Nutrition கிட்டில் கர்ப்பிணிகளுக்கான இரும்புச் சத்து டானிக்குகள் அனிதா டிக்ஸ் காட்  மூலம் வாங்கியதால் 32 கோடி மாநில அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது . இவை இரண்டின் காரணமாக மொத்தமாக  தமிழக அரசுக்கு 77 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும்  G square முன்னேற்றக்  கழகமாக சென்னை cmda மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும் , ஆனால்  Gsquare கோவையில் 122 ஏக்கர்களுக்கான லே அவுட் 8 நாளிலே பெற்றுள்ளதாக தெரிவித்தார். G square ன் 15 பெரிய மனைநில வளர்ச்சிப் பணிகளை 20 நாளுக்குள் செய்துள்ளனர் , திமுகவின் விஞ்ஞான ஊழல் இது. CMDA வில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது. ஆனால் G sqare பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே ஆன்லைன் பதிவு open ல் இருக்கிறது. G square க்கு உதவ திமுகவினர் cmda வில் , Ceo எனும்  புதிய பொறுப்பை உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். 

ஆளுநரிடம் ஊழல் புகார் புத்தகம்

G square 6 நிறுவனத்தை புதிதாக தொடங்கியுக்ளனர். ஐதராபாத் , பெங்களூரில் அவற்றை தொடங்கியுள்ளனர். வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் கூற வேண்டும். அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். sun shine holding india , Llp hyderabad , Max space , Mannorr white field போன்ற நிறுவனங்கள்  Gsquare சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். திமுகவிற்கு , முன்னர் 2G முடிவுரை எழுதியது போல , தற்போது  G square என்ன செய்யப்போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆவின் பொருளை புறக்கணித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்த அவர், இதன் மீது நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார். 20 ம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் , சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

செருப்பால் சிக்கிய கோடீஸ்வர கொள்ளையர்கள்..! காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!