திமுக ஆட்சியில் விடியல.. இருண்டுபோச்சு.! விளாசி தள்ளும் டிடிவி தினகரன்

Published : Jun 05, 2022, 12:58 PM ISTUpdated : Jun 05, 2022, 12:59 PM IST
திமுக ஆட்சியில் விடியல.. இருண்டுபோச்சு.! விளாசி தள்ளும் டிடிவி தினகரன்

சுருக்கம்

தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் 7வது வார்டில் கொடியை ஏற்றிவைத்தார். பிறகு  செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசாங்க மேடையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். 

தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை. தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார். திராவிட மாடல் என்றால் என்ன, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் என்று சொல்கிறாரா?

தடுமாற்றம் தெரிகிறது இந்த ஆட்சியில், காரணம் பழனிச்சாமி கம்பெனி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் இன்று வருகிறது.விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள். ஆனால் இன்று இருண்ட தமிழகம் தான், திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது. மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்’ என கூறினார்.

இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !

இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!