எடப்பாடி அரசுக்கெதிராக லேட்டஸ்டாக இணைந்த பாஜக!

Asianet News Tamil  
Published : Sep 23, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
எடப்பாடி அரசுக்கெதிராக லேட்டஸ்டாக இணைந்த பாஜக!

சுருக்கம்

BJP joins latest against Edappadi government

தமிழக அரசு நல்லதை செய்தால் நாங்கள் பாராட்டுவோம் என்றும் சரியான திட்டங்களை எடுத்து செல்லவில்லை என்றால் அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த தயார் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை, ஓட்டேரியில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார்.

ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளின் காரணத்தைக் கண்டுபிடித்து அதனை களைய முயற்சி செய்ய வேண்டும்.

பாஜாகவை பொறுத்தமட்டில் இந்த அரசு நல்லதை செய்தால் நாங்கள் பாராட்டுவோம். சரியான திட்டங்களை எடுத்து செல்லவில்லை என்றால் அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட்டுக்கு ஆதரவாக குழந்தைகளைத் தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.  நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை ஒதுக்கி பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!