பறக்க தயாராகிவிட்டது பாஜக; பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது... அண்ணாமலை அதிரடி!!

By Narendran S  |  First Published Mar 24, 2023, 7:03 PM IST

தமிழகத்திலும் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


தமிழகத்திலும் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகி விட்டது. கிளி பறக்க தயாராக உள்ளது. பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது. மோடியின் ஆட்சி 9 ஆண்டு காலத்தை நிறைவு செய்து 10 வது ஆண்டில் காலெடுத்து வைத்து உள்ளோம். 46 கோடி மகளிருக்கு வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளது. 2024 பாஜக வெற்றி பெற்ற பிறகு மக்களை வசியம் செய்து விட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும். பாஜக இந்துக்களுக்கான கட்சி என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

இதையும் படிங்க: சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்... ராகுல் தகுதி நீக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து!!

Latest Videos

வட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூர் மேகாலயா திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. கிறிஸ்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா இடத்தில களம் மாறிவிட்டது. கூண்டுக்குள் இருக்கும் கிளியை போன்று இல்லாமல் கூண்டை விட்டு வெளியே பறக்கும் கிளியாக பாரதிய ஜனதா தமிழகத்தில் மாறி இருக்கிறது. கூண்டை உடைத்து விட்டு வெளியே பறப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி விட்டது. தமிழகத்திலும் அரசியல் களம் மாறிவிட்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியலை போன்று நடந்தால் தமிழகம் பின்னோக்கி செல்லும். திமுக அமைச்சர்கள் கண் முன்னாள் கொள்ளையடித்து கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: சட்டம் அனைவருக்கும் சமம்! ராகுல்காந்திக்கும் அதே தான் - அண்ணாமலை பளீச்!

2024 பாஜகவுக்கான காலம். இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என சொல்லும் அளவில் உள்ளது. இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என சொல்லும் அளவில் உள்ளது. இலங்கை அதிபர் மே மாதம் இந்தியா வருகிறார். பிரபாகரனை சுட்டுக் கொள்ள உதவியது காங்கிரஸ் அரசு. உளவுத்துறையும் பிரபாகரன் சுட்டு கொள்ள உதவி செய்தது. 2024 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அனுப்ப வேண்டும். ஈரோடு கிழக்கில் 30 நாள் காய்கறி இலவசம் வழங்கப்பட்டது. இப்படியே போனால் ஜனநாயகம் முட்டுச்சந்தில் தான் நிற்கும். இளைஞர்களை தொழிலதிபராக்கி வேலைவாய்ப்பு கொடுப்பதை யோசிப்பது மோடி. இளைஞர்களை போஸ்டர் ஒட்ட செய்து கோபாலபுரத்திற்கு அடிமையாக்கியது திமுக. தமிழகத்தில் புதிய பாதை கிடைத்து உள்ளது. மோடி உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

click me!