
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸைவிட பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள். அவற்றில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகரை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 40 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 68 தொகுதிகளிலும் தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாஜக காங்கிரஸைவிட அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும்பான்மைக்கு 113 தேவையான நிலையில், பாஜக தற்போது 104 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.