தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்... ஹெச்.ராஜா, தமிழிசைக்கு இந்தத் தொகுதிகளா..?

Published : Mar 04, 2019, 05:35 PM IST
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்... ஹெச்.ராஜா, தமிழிசைக்கு இந்தத் தொகுதிகளா..?

சுருக்கம்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. 

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. 

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. இதக் கூட்டணியில் தேமுதிக இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூவமாக இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 இடங்களுக்கான உத்தேச தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

சிவகங்கை தொகுதியில் எச்.ராஜாவும், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையும், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் தென் சென்னையில் இல.கணேசனும், கோவையில் சிபி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. மதுரை, ராமநாதபுரம் தொகுதிகளும் பாஜகவின் சாய்ஸாக இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!