பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுவதா? பொன்னாரை வார்த்தையால் புரட்டி எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Oct 8, 2020, 11:23 AM IST
Highlights

கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்துக்கு தள்ளியதுதான் திமுகவின் சாதனை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்துக்கு தள்ளியதுதான் திமுகவின் சாதனை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நாகர்கோவிலில் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்;- கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்க வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி அமைவதை விரும்புவார்கள்.  தேர்தல் நெருங்கி வரும்போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள்.

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம் என்றார். இவரது கருத்து அதிமுக தலைமைக்கு கடும் எச்சரிச்சலை கோபத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து சொல்வதற்கு பதில் சொல்ல முடியாது. கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்துக்கு தள்ளியதுதான் திமுகவின் சாதனை என விமர்சனம் செய்துள்ளார்.மேலும், அதிமுகவில் புதிதாக அமைக்கப்படும் குழுக்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!