H RAJA : விரைவில் கைதாகும் எச்.ராஜா ? நிதியமைச்சர் பி.டி.ஆர் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு.. என்ன நடந்தது ?

By Raghupati RFirst Published Dec 14, 2021, 8:29 AM IST
Highlights

‘நிதியமைச்சர் பி.டி.ஆர் வேலை பார்த்த இடங்கள் விளங்கியதில்லை’ என்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்  பாஜக மூத்த தலைவர்  எச்.ராஜா. அப்போது பேசிய அவர், ‘திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மழை வெள்ளத்தை சமாளிக்க முடியமால் தோற்ற அரசு திமுக அரசு. எல்லா துறைகளிலும் திமுக தோற்றுவிட்டது.நிதியமைச்சர் பி.டி.ஆர் வேலை பார்த்த இடங்கள் விளங்கியதில்லை. மக்களை திசை திருப்பும் நோக்கில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. திமுக அரசின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். 

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பட்டா நிலத்தில் இருக்க கூடிய கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளன. பாஜகவினர் கூடினால் கொரோனா பரப்புவதாக வழக்கு பதியப்படுகின்றன. முதலமைச்சர் கூடும் நிகழ்வுகளில் கொரோனா பரவுவது இல்லையா. கிறிஸ்மஸ் அன்று வெளிநபர்கள் தேவாலயங்களுக்கு அனுமதியில்லை என்று கூறுவதற்கு இந்த அரசுக்கு முதுகெலும்பு உள்ளதா ? என்று கேள்விகளை தொடர்ந்து எழுப்பினார். மேலும், காவல்துறை ஏவல்துறையாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக சொல்லியிருக்கிறார். 

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் சொத்து விபரங்களை தலைமை செயலாளர் கேட்டிருப்பது வரவேற்ககூடியது. விமான விபத்து குறித்து கருப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியவரும்.பிபின் ராவத், மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசியவர்களின் ஆதாரங்கள்  என்னிடம் இருக்கிறது. அந்த தேச விரோதிகளையும் கைது செய்ய வேண்டும்.  காஷ்மீர் போன்று தமிழ்நாடு உள்ளது’ என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழக அரசு குறித்தும், நிதியமைச்சர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் எச்.ராஜா. எனவே எச்.ராஜா விரைவில் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

click me!