மத்திய அரசின் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்..? கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக உரிமை மீறல் புகார்!

By Asianet TamilFirst Published Jan 1, 2020, 9:02 AM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடக்கம் முதலே கேரள அரசு எதிர்த்துவருகிறது. அந்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், அதற்கு எதிரான போராட்டத்திலும் பங்கேற்றார். இதேபோல என்.ஆர்.சி. என்றழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கேரளாவில் அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்த பினராயி விஜயன்,  என்.பி.ஆர். என்றழைக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நிறுத்தி வைப்போம் என்றும் அதிரடிக் காட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ஒருவர் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை தொடக்கம் முதலே கேரள அரசு எதிர்த்துவருகிறது. அந்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், அதற்கு எதிரான போராட்டத்திலும் பங்கேற்றார். இதேபோல என்.ஆர்.சி. என்றழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கேரளாவில் அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்த பினராயி விஜயன்,  என்.பி.ஆர். என்றழைக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நிறுத்தி வைப்போம் என்றும் அதிரடிக் காட்டினார்.

இந்நிலையில் கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடாளுமன்றத்தின் உரிமையை மீறிவிட்டதாக பாஜக எம்.பி. நரசிம்மராவ் உரிமை மீறல் புகாரை அளித்துள்ளார். மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய நாயுடுவிடம் இந்தப் புகாரை எம்.பி. நரசிம்மராவ் அளித்துள்ளார். அந்தப் புகாரில் , “ கேரள சட்டமன்றத்தில் மத்திய சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதித்துவிட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!