தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்...? டெல்லியை முற்றுகையிட்ட பாஜக மூத்த தலைவர்கள்..!

By Ajmal KhanFirst Published Apr 8, 2022, 11:13 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக நிர்வாகிகளை  மாற்ற மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக மூத்த நிர்வாகிகள்  டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 

25 தொகுதிகள் இலக்கு 

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில தலைமையை தேர்தல் பணியை துவங்குமாறு ஏற்கனவே பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என இலக்கோடு தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காக செயல்படாத மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை மாற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.மேலும்  தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


 
நிர்வாகிகள் மாற்றம்- மோதல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக அடுத்தபடியாக பாஜக அதிக வாக்குகளை பெற்று தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக உள்ளது. எனவே இந்த உற்சாகத்தோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாகவே பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியல் எப்போது வெளியே வரும் என பாஜகவினர் காத்திருந்தனர். இந்தநிலையில் புதிய நிர்வாகிகள் மாற்றுவதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பொதுச்செயலாளர்கள் மற்றும் 50 சதவிகித மாவட்ட தலைவர்களை தான் நியமிக்க இருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு மற்ற பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் முகாம்

இந்தநிலையில் மாநில மூத்த நிர்வாகிகள் வழங்கிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிர்ச்சி அடையவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தான் எதிர்பார்த்த 90 சதவிகித மாவட்ட தலைவர்கள் பெயர் இல்லாததால் அதிருப்தி அடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக மேலிடத்தலைவர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நிர்வாகிகள் பட்டியல் தேர்வு தொடர்பாக தான் டெல்லி செல்லவில்லையென்றும், மதுரையில் தான் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தான் யாருக்கும் முட்டுகட்டையாக இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.  கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே எனவும் தனது பதிவில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

click me!