முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பாக அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதனை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகியின் அவதூறு பேச்சு
மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் கலந்துகொண்டார். அப்போது அவர் தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்து மிகவும் அவதூறாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக விக்கிரவாண்டி திமுக நகர துணைச் செயலாளர் சித்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கைது செய்த போலீஸ்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள கலிவரதனை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கலிவரதன் மீது 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கலிவரதன் இன்று அதிகாலை செய்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்