பாமகவிடம் பாஜக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. அண்ணாமலை தடாலடி.. விஜய் மக்கள் மன்றம் குறித்து கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 5:39 PM IST
Highlights

ஜிஎஸ்டியின் கீழி பெட்ரோல் விலை கொண்டு வந்தால் 30 முதல் 35 ரூபாய் விலை குறையும் என்றார், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை, பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார். அதேபோல பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள், ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளனர், 

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற பாமகவின் உணர்வுக்கு பாஜக மதிப்பளிக்கிறது என்றும், பொய்யான விஷயங்களை கூறி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி உள்ளனர் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து மத்திய பாஜக அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன. அதில் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை உயர்த்தி வருகிறது என்றும், புதிய வேளாண் சட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு சட்டங்களை எதிர்த்து முழக்கமிட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது. 

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது என்கிறார்கள், பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் விலை உயர்ந்தது உண்மைதான், ஆனால் இப்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது என்றார். அதேபோல் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதாக திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கூறிவருகின்றன, அதுபோல எந்த நிறுவனமும் தாரைவார்க்கபடவில்லை, அவற்றை குத்தகைக்கு விட்டு லாபம் பார்ப்பது மத்திய அரசின் நோக்கம் என்றார். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிகீழ் கொண்டு வரவேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கோரிக்கை வைத்தது ஆனால் இப்போது வேண்டாம் என்கின்றனர். ஜிஎஸ்டியின் கீழி பெட்ரோல் விலை கொண்டு வந்தால் 30 முதல் 35 ரூபாய் விலை குறையும் என்றார், 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை, பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார். அதேபோல பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள், ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளனர், அவர்களின் அந்த உணர்வுக்கு பாஜக மதிப்பளிக்கிறது என்றார். பாமக விடம் பாஜக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கூறிய அவர், பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கட்டணம் இலவசம் என்பதை வரவேற்பதாக கூறினார். அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்கேயும் வெளியாகவில்லை, எனவே அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். 

 

click me!