ஜெயலலிதாவை காப்பி அடித்த பாஜக.. உ.பியில் ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம்.. பரபரக்கும் தேர்தல் வாக்குறுதி.

Published : Feb 10, 2022, 05:33 PM IST
ஜெயலலிதாவை காப்பி அடித்த பாஜக.. உ.பியில் ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம்.. பரபரக்கும் தேர்தல் வாக்குறுதி.

சுருக்கம்

பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை வாசிக்கும் போது தமிழகத்தின் சாயல் காணமுடிகிறது, நாம் கற்றுக் கொடுத்த இலவசங்களை இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் காப்பி அடிக்கத்  தொடங்கி இருக்கிறார்கள். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம் கான்செப்ட் பாஜக, சமாஜ்வாடி என இரண்டு கட்சிகளும் இப்போது தங்கள் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளன. 

உ.பியிஎல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மலிவு விலையில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என உத்திர பிரதேச மாநில பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இடம் பெற்றுள்ளது. இரு கட்சிகளும் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் முழுக்க முழுக்க  தமிழகத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. அதிலும் அம்மா உணவகம், பெண்களுக்கு ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் , சுமாட் போன் போன்ற பாஜகவின் அறிவிப்புகள் செல்வி ஜெயலலிதாவின் திட்டங்களை நகல் எடுத்தது போலவே உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அங்கு பம்பரமாக சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக பாஜகவுக்கும்- சமாஜ்வாடி கட்சிகுமே நேரடி போட்டி நிலவுகிறது. தோற்றகப்போவது உறுதி என்பது தெரிந்துவிட்டதால் பகுஜன் சமாஜ் மாயாவதி அடக்கி வாசிக்கிறார். தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னரும் உண்மையிலேயே தனது கட்சிக்கான பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக களத்தில் சுழன்று வருகிறார். இந்நிலையில் பாஜக சமாஜ்வாடி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுவாக பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறாது. ஆனால் இந்த முறை உ.பி தேர்தல் அறிக்கை விதிவிலக்காக உள்ளது. மக்களை கவர்ந்து இழுக்கும் இலவசங்கள், மதரீதியான வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

முதல் தலைமுறை வாக்காளர்கள், விவசாயிகளை கவர்ந்திழுக்கும் தேர்தல் வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை லோக் கல்யாண் சங்கல் பத்ரா என்ற பெயரில் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதில் பேசிய அமித் ஷா சொன்னதை பாஜக செய்யும், தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் முன்னேற பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு தாருங்கள் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஜக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- அயோத்தியில் ராமாயண பல்கலைக்கழகம் நிறுவப்படும், லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோர்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும், திறமையான மாணவிகளுக்கு ராணி லட்சுமிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும், சுவாமி விவேகானந்தா யுவ சக்தி கரன் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடி டேப்லெட், ஸ்மார்ட் போன் வழங்கப்படும், 

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிதி உதவி, ஹிந்து பண்டிகைகளான ஹோலி, தீபாவளிக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், உ.பி முழுவதும் " மா அன்னபூரணி " மலிவுவிலை உணவகம் அமைக்கப்படும், அவற்றின் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் பாசனத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்தால் அதற்குரிய தொகையை கொள்முதல் செய்த 14 நாட்களில் வழங்கப்படும், இல்லையெனில் ஆலைகள் வட்டியுடன் நிலுவையை செலுத்த வேண்டும், மாநிலத்தில் 30 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகள் நவீன மயமாக்கப்படும், மாநிலத்தில் 6 மெகா உணவுப் பூங்காக்கள் உருவாக்கப்படும், மீரட், ராம்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படை அமைக்கப்படும், என்பனவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. 

இதேபோல சமாஜ்வாடி கட்சியும்தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமாஜ்வாடி வாட்சன் பத்திர என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- விவசாயி போராட்டத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், இறந்த விவசாயிகள் நினைவாக நினைவிடம் கட்டப்படும், அனைத்து பள்ளிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படும். உழவர்சந்தை விரிவுபடுத்தப்படும், கிராமங்களில் நவீன வேளாண்மை உத்திகள் புகுத்தப்படும், நீர்ப்பாசனத் திட்டங்களால் விவசாய நிலங்கள் 100% பயன்பெறும், வட்டியில்லா கடன் கொடுக்கப்படும், வீடுகளுக்கு 300 வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 10 ரூபாய்க்கு உணவு தரும்  உணவகங்கள் அமைக்கப்படும். ஆண்டுக்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும், இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் பொன்றவை சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையின் கவர்ச்சியான அம்சங்களாக உள்ளன.

பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை வாசிக்கும் போது தமிழகத்தின் சாயல் காணமுடிகிறது, நாம் கற்றுக் கொடுத்த இலவசங்களை இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் காப்பி அடிக்கத்  தொடங்கி இருக்கிறார்கள். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகம் கான்செப்ட் பாஜக, சமாஜ்வாடி என இரண்டு கட்சிகளும் இப்போது தங்கள் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளன. ஜெயலலிதா இலவச சைக்கிள் வழங்கினார் என்றால், இலவச ஸ்கூட்டர் வழங்குகிறேன் என அறிவித்துள்ளார் யோகி, ஜெயலலிதா இலவச லேப்டாப் வழங்கினார் என்றால், இலவச டேப்லட் வழங்குகிறேன் என்கிறார் யோகி ஆதித்யநாத், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வீடுகளுக்கு இலவச மின்சாரம்  தருகிறேன் என ஜெயலலிதா கூறியது போன்ற வாக்குறுதியை அகிலேஷ் யாதவ் இப்போது கொடுத்திருக்கிறார். தமிழகத்தின் தாக்கம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சற்று அதிகமாகவே எதிரொலித்துள்ளது. மொத்தத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை காட்டிலும், பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இதை அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த மம்தாவின் பேச்சில் இருந்து அறிய முடிகிறது. பாஜகவின் வாக்குறுதிகளை கேட்டு மயங்கி விட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார், அப்படி எனில் பாஜகவின் வாக்குறுதி மயக்கத் தக்க வகையில் உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது. வழக்கமாக இது போன்ற வாக்குறுதிகளை தமிழக அரசியல் கட்சிகளே கூறி வந்த நிலையில், இப்போது  அதே பாணியை உத்தரப் பிரதேச மாநில அரசியல் கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!