20 லட்சம் கோடி திட்டம்.. உலகிலேயே மாபெரும் பொருளாதார மீட்பு திட்டம்... மார்த்தட்டும் பாஜக!

By Asianet TamilFirst Published May 13, 2020, 8:56 PM IST
Highlights

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு திட்டம் பற்றி இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படும் வகையிலும் தொழில் துறை நெருக்கடியிலிருந்து மீளும் வகையிலும்  திட்டங்களை நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்தத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார மீட்பு திட்டம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.
 

பிரதமர் அறிவித்துள்ள பொருளாதார மீட்பு திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மீட்பு திட்டம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான்  தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 4வது கட்டமாக மே 18க்கு பிறகு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றியபோது தெரிவித்தார். அந்த ஊரங்கு புதிய வடிவில் இருக்கும் என்றும் பிரதமர்  தெரிவித்தார். மேலும் சிறுகுரு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருளாதார தொகுப்பு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 
அதன்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு திட்டம் பற்றி இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படும் வகையிலும் தொழில் துறை நெருக்கடியிலிருந்து மீளும் வகையிலும்  திட்டங்களை நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்தத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார மீட்பு திட்டம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் குறிப்பிட்டதைப் போல 21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்தும். கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற முன்களப்பணியாளர் போல் பிரதமர் செயல்பட்டுவருகிறார். பிரதமர் அறிவித்துள்ள பொருளாதார மீட்பு திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மீட்பு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்” என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

click me!