பாஜகவின் துரோக அரசியல் - பொங்கி எழுந்த திருநாவுக்கரசர்

Asianet News Tamil  
Published : Oct 17, 2016, 05:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
பாஜகவின் துரோக அரசியல் - பொங்கி எழுந்த திருநாவுக்கரசர்

சுருக்கம்

பாஜக தமிழகத்துக்கு எதிராக துரோக அரசியலில் ஈடுபட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையாக இருக்கிறது , இதை எதிர்த்து 17,18 தேதிகளில் நகக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை.

காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியால் 2013ல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை அக்டோபர் 17, 18, 2016 (திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை) ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து 48 மணி நேரம் தொடர் மறியல் போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பில் தீர்மானித்தபடி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், விவசாய பிரவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் செயல் வீரர்கள் பெருமளவில் பற்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தில் நமக்கு வழங்கப்பட்ட நீதியை முடக்குகிற வகையில் அரசியல் ஆதாய நோக்கத்தோடு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மத்திய நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க. ஆட்சியின் வஞ்சகத்தன்மைக்கு தமிழக மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் அமைய வேண்டுமென விரும்புகிறேன். காவிரி மேலான்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று திடீரென கூறி செயல்படும் மத்திய பா.ஜ. க. அரசின் துரோக அரசியலுக்கு முடிவு கட்டுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறே. இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.         

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!