கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டி பாஜகவினர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அருகே உள்ள பூலுவப்பட்டியில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர், அவர்கள் பிரதமர் மோடியின் உருவ படத்தை அலுவலகத்தில் மாற்ற வற்புறுத்தி அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
undefined
அப்போது, அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை அவர்கள் மாட்டினர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும் மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை மண்டல பூலுவபட்டி பேரூராட்சியில் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் போட்டோ பலமுறை சொல்லியும் மாட்டவில்லை
பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து மாற்றினார்.1/n pic.twitter.com/4wddjiOMRi
இதனால் பாஜகவினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் மோடியின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும், புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.