”அதிமுக தொண்டையை கடித்து ரத்தம் குடிக்கிறது பஜக”.. தாமரையாக மாறிய இரட்டை இலை.?? கொதிக்கும் சுந்தரவல்லி.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2021, 1:28 PM IST
Highlights

இபிஎஸ்- ஓபிஎஸ் என்ற இரண்டு பாஜக அடிமைகளின் கையில் அந்த கட்சி சிக்கியிருப்பதே இந்த நிலைக்கு காரணம். அதிமுகவை பாஜகவுக்கு அவர்கள் தின்னக் கொடுத்து விட்டார்கள், இருவரும் அதிமுகவை ஒழித்துக் கட்டிவிட்டு தங்களது சுயநல வாழ்வை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 

பாஜக அதிமுக என்ற கட்சியின் தொண்டையை கடித்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறது. அதை ஓபிஎஸ் இபிஎஸ் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அந்தக் கட்சியே காணாமல் போகும் நிலை உருவாகிவிட்டது என அரசியல் விமர்சகரும், பேராசிரியருமான சுந்தரவல்லி விமர்சித்துள்ளார்.  பல இடங்களில் இரட்டை இலை தாமரையாக மாறிக்கொண்டிருக்கிறது, இதை நான் சொல்லவில்லை பாஜகவினரே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்  ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது. சிறையிலிருந்து வெளியில் வந்துள்ள சசிகலா கட்சியை கைப்பற்றிய தீருவேன் என பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் நடந்துவரும் குளறுபடிகள் அதிமுக தொண்டர்களை ஒருவகையில் சோர்வடைய வைத்துள்ளது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. அதற்கும் மேலாக நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சொந்த கட்சிக்காரர்களே அதங்கப்படும் அளவுக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க மறுபுறம் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் என கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வருகின்றனர். ஏற்கனவே அதிமுக- அமமுக என பிரிந்துள்ள நிலையில் அடிக்கடி கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டு வருவது தொண்டர்களை கவலைகொள்ள வைத்துள்ளது. 

இதில் பலர் ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி இயங்கவேண்டும், அதுதான் தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும், இரட்டைக் தலைமை என்பது அதிமுக போன்ற கட்சிகளுக்கு உகந்தது அல்ல என்ற கருத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இக்கருத்தை வெளிப்படையாக கூறிவந்த முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை அக்கட்சி தலைமை நீக்கியுள்ளது. அவரது நீக்கம் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களை, அதிலும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை குறிவைத்து ஓபிஎஸ் இபிஎஸ் நீக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே கருத்தை முன்வைத்து அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான சுந்தரவல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை அவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- ஒருவழியாக அதிமுக தனது இறுதிப் பயணத்தை தொடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற மிகப் பெரும் தலைவர்கள் கட்டி ஆண்ட கட்சி அது, பல தலைவர்களை உருவாக்கிய கட்சி அது.

தற்போது மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது, இபிஎஸ்- ஓபிஎஸ் என்ற இரண்டு பாஜக அடிமைகளின் கையில் அந்த கட்சி சிக்கியிருப்பதே இந்த நிலைக்கு காரணம். அதிமுகவை பாஜகவுக்கு அவர்கள் தின்னக் கொடுத்து விட்டார்கள், இருவரும் அதிமுகவை ஒழித்துக் கட்டிவிட்டு தங்களது சுயநல வாழ்வை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதன் எதிரொலியாக தான் கட்சியில் இருக்கிற இஸ்லாமியர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே கட்சிக்கு உண்மையாக இருந்தவர்களானாலும், உழைத்தவர்களாக இருந்தாலும் அவர்களும் நீக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களை தூக்கி வெளியில் போடும் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலோபர் கபிலை தூக்கிவிட்டார்கள். கேட்டால் ஊழல் என்கிறார்கள். உடலில் அடிபட்ட பலர் கட்சியில் இருக்கும் போது, அவரை மட்டும் தூக்குவதன் நோக்கம் என்ன.? இப்போது அன்வர் ராஜாவை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவர் அம்மா காலத்திலிருந்து அய்யா எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். எதிர்த்து கேள்வி கேட்டால் பிஜேபியை குறை கூறினால், அவர்களை காட்சியிலிருந்து தூக்குவோம் என்று கட்சியரை மிரட்டுவதற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.

அன்வர்ராஜா, அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவிடம் இருந்து விடுபட வேண்டும் என கூறியவர், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை நம் கட்சி படுதோல்வியையே சந்திக்கும் என உண்மையை கூறியவர். அப்படிப்பட்டவர் நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலூன்ற முடியாத பிஜேபியை தமிழகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் நுழையவைத்திருக்கிறார்கள். அதனால் இப்போது பாஜக அதிமுக வின் தொண்டையை கடித்து ரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறது. சேலம் கொங்குப் பகுதிகளில் இரட்டை இலை தாமரையாக மாறிவிட்டது என பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். இப்போது தமிழ்மகன் உசேன் அவர்களை அவைத்தலைவராக அமர்த்தியிருப்பது  ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இஸ்லாமியர்கள் வாக்குகளை கைவிட்டுபோய்விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆர்எஸ்எஸின் கைக்கூலிகள் என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழகத்திற்கு எதிரான நாசகர திட்டங்கள் அனைத்திற்கும் பாஜகவின் கையை பிடித்துக்கொண்டு  நீங்கள் ஒப்புதல் அளித்து உள்ளீர்கள். ஏற்கனவே மக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் மீது கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பிஜேபி காரர்கள் 4 பேரை உங்கள் தோளில் சுமந்து கொண்டு வந்து கோட்டையில் இறக்கி விட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!