பாஜக அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலை அண்ணாமலை இல்லை.. அவர் சொல்வது வேத வாக்கா.? காங்கிரஸ் எம்.பி. பொளேர்!

Published : Jun 10, 2022, 08:19 PM IST
பாஜக அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலை அண்ணாமலை இல்லை.. அவர் சொல்வது வேத வாக்கா.? காங்கிரஸ் எம்.பி. பொளேர்!

சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை இல்லை என்று தமிழக காங்கிரஸி மூத்த தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்து சமயம் மற்றும் அறநிலை துறையில் உள்ள அதிகாரிகளாக இருக்கட்டும், மடாதிபதிகளோ, ஆதினங்களோ யாராக இருந்தாலும் சில அதிகாரங்கள் உள்ளன. அதே போல் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அதனால் அவர்கள் அளவோடுதான் இருக்க வேண்டும். மடாதிபதிகள் வாயைத் திறக்கவே கூடாது, பேசவே கூடாது என்பது அல்ல. யாரும் கருத்து சொல்லலாம் பேசலாம். மடாதிபதிகளாக இருந்தாலும் தேவாலயம், பள்ளிவாசல், இந்து மதக் கோயில்கள் சம்பந்தப்பட்ட மதத் தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டி பேசிக் கொள்ளலாம். அவர்களுடைய மதத்தைப் புகழ்ந்து கொள்ளலாம். 

ஆனால், பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்திலோ அல்லது மற்ற நம்பிக்கைகளை உடைக்கும் வகையிலோ பேசக் கூடாது. அதுபோல மத பிரச்னையோ மக்கள் பிரச்னையையோ பிரிவினையை தூண்டு விடும்படி பேசக் கூடாது. மடாதிபதிகள் என்பவர்கள் அமைதியை நிலைநாட்டக் கூடியவர்கள். அவர்கள் வரம்புக்குள் பேச வேண்டும். மதுரை ஆதீனமோ, வேறு எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை எல்லாம் மதிக்கிறோம். அரசும் அவர்களை மதிக்கும். மடாதிபதிகளின் பேச்சு பிரிவினையைத் தூண்டும் விதத்தில் இருக்கக் கூடாது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வரும் 11- ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும். 

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது மிக அதிகபட்சமாக பழிவாங்கும் நடவடிக்கையில்தான் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன, இது மிகவும் கடுமையான கண்டனத்துக்கு உரியது. கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கேரளா முதல்வருக்கு தொடர்பு உள்ளது என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக குற்றவாளி கூறும் வாக்கு மூலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலை தெரிய வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை இல்லை. அண்ணாலை சொல்வது வேத வாக்கா என்ன? அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றுகிறார்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!