ராகுல், பிரியங்கா கடின உழைப்பாளிகள்... சர்டிபிகேட் கொடுத்த பாஜக கூட்டணி கட்சி!

By Asianet TamilFirst Published May 22, 2019, 6:59 AM IST
Highlights

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சியாக உட்காரும் அளவுக்குக்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்கட்சியாக உட்காரும். அதன் தலைவர் ராகுல் எதிர்கட்சி தலைவராவார். 

தேர்தலில் கடுமையாக உழைத்ததாக காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராவார் என்று தெரிவித்துள்ளது.
ஏழு கட்டங்களான நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கே சாதகமாக வந்துள்ளன. தாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் பாஜக கூட்டணி கட்சிகள் உள்ளன. கருத்துக்கணிப்பை நிராகரித்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகளை பீதியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


இந்நிலையில், பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா, காங்கிரஸ் தலைவர் ராகுலையும், பொதுச்செயலாளர் பிரியங்காவையும் பாராட்டியுள்ளது. அக்கட்சி பத்திரிகையான  சாம்னாவில் இது பற்றி எழுதப்பட்டுள்ளது. அதில், ‘மோடியே மீண்டும் பிரதமராவார் என சொல்லத் தேவையில்லை. மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  சிவசேனா - பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சியாக உட்காரும் அளவுக்குக்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்கட்சியாக உட்காரும். அதன் தலைவர் ராகுல் எதிர்கட்சி தலைவராவார். இது நிச்சயமாக ராகுலுக்கு கிடைத்த வெற்றிதான். ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்.’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!