உச்சக்கட்ட டென்ஷனில் அதிமுக கூட்டணி கட்சிகள்... தேர்தல் முடிவு எப்படி வருமோ என எதிர்பார்ப்பு!

By Asianet TamilFirst Published May 22, 2019, 6:43 AM IST
Highlights

கருத்துக்கணிப்பை மீறி வெற்றி கிடைக்கும் என அதிமுகவை போல பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தேர்தலில் என்ன முடிவு கிடைக்குமோ என்ற பீதியிலும் இக்கட்சி தொண்டர்கள் உள்ளனர். 

அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவுகள் எப்படி வருமோ என்ற டென்ஷனில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 
 நாடளுமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கு போட்டியாக அதிமுகவும் மெகா கூட்டணி அமைத்தது. பாமக, தேமுதிக, பாஜக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தன. இதில் அதிகபட்சமாக பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேமுதிக 4 தொகுதிகள் மட்டுமே அதிமுக ஒதுக்கியது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும்  தருமபுரி தொகுதியில் அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார். தேமுதிகவுக்கும் இதே நிலைதான். ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டும் ஒரு எம்.பி.யை கூட தேமுதிக பெற்றதில்லை.


இந்த இரு கட்சிகளும் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவும், நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையை வைத்திருக்கவும் விரும்புகின்றன. ஆனால், கருத்துகணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கருத்துக்கணிப்பை ஏற்கும் மனநிலையில் அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இல்லை.
கருத்துக்கணிப்பை மீறி வெற்றி கிடைக்கும் என அதிமுகவை போல பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தேர்தலில் என்ன முடிவு கிடைக்குமோ என்ற பீதியிலும் இக்கட்சி தொண்டர்கள் உள்ளனர். தேர்தல் முடிவுகள் சாதகமாக வராமல் போனால், சிக்கல் ஏற்படும் என்ற கவலையிலும் இக்கட்சிகள் உள்ளன.

 
இதேபோல தஞ்சாவூரில் போட்டியிட்ட தமாகாவும் தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என்று காத்திருக்கிறது.  சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமாகாவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு சீட்டையும் தமாகா போராடியே பெற முடிந்தது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே தமாகாவுக்கு கெளரவம் கிடைக்கும் என்ற நிலையே உள்ளதால், அக்கட்சியும் தேர்தல் முடிவை டென்ஷனுடன் எதிர்நோக்கியுள்ளது.

click me!