நான் அப்பவே சொன்னேன் யார் கேட்டாங்க ? குமுறும் சி.வி.சண்முகம் !!

By Selvanayagam PFirst Published Jun 14, 2019, 8:29 PM IST
Highlights

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்கவில்லை என்று பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தவறான கூட்டணியால்தான் நாம் தோற்றுப் போனோம் என்றும் தெரிவித்தார்.
 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் தேனி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.

பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி அமைப்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனாலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தவறான கூட்டணியை அமைத்ததன் காரணமாகத்தான் தோற்று விட்டோம் என தெரிவித்தார்.

மோடிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குளை இழந்துவிட்டோம். அதனால் தான் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. கூட்டணியில் செய்த தவறைத் திருத்திக் கொள்கிறோம்.

அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்தார் என குற்றம்சாட்டினார். ஆனால் அந்த பொய் பிரச்சாரத்தை பாஜக முறியடித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது என சண்முகம் தெரிவித்தார்.

நாங்கள் செய்த தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான். ஆனாலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தை திமுக முற்றிலும் மறந்துவிட வேண்டும் என பேசினார். அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சி.வி.சண்முகத்தின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!