இதுவரைக்கும் எத்தனை தலையை வெட்டியிருக்கீங்க? சங் பரிவார் அமைப்புகளை கலாய்த்த பினராயி விஜயன்..

 
Published : Mar 03, 2017, 07:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
இதுவரைக்கும் எத்தனை தலையை வெட்டியிருக்கீங்க? சங் பரிவார் அமைப்புகளை கலாய்த்த பினராயி விஜயன்..

சுருக்கம்

Binayaee vijayan vs r.s.s

இதுவரைக்கும் எத்தனை தலையை வெட்டியிருக்கீங்க? சங் பரிவார் அமைப்புகளை கலாய்த்த பினராயி விஜயன்..

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படப்போவதில்லை என பினராயி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக உள்ள குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் எண்டனம் தெரிவித்துள்ளனர்.

குந்தன் சந்திரவாதின் பேச்சுக்கு  பதிலடி கொடுத்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது என கிண்டல் செய்துள்ளார்.

இவர்களின் மிரட்டலுக்கெல்லாம்  தான் பயப்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

அண்மையில்  பெங்களூரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனால், கோபமடைந்த குந்தன் சந்திரவாத் அவருக்கு எதிராக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு