டிடிவிக்கு மேலும் ஒரு பலத்த அடி... கட்சியில் சேர்ந்த நான்கே மாதத்தில் இறந்த கிரேசி மோகன்!!

By sathish kFirst Published Jun 10, 2019, 4:08 PM IST
Highlights

சமீபகாலமாக தொண்டர்கள் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக, திமுக கட்சியில் இணைந்து வருவதால் தொடர் இழப்பை சந்தித்துவரும் தினகரனுக்கு, கிரேசி மோகனின் மறைவால் பேரிழப்பாக அமைந்துள்ளது. 

நடந்து முடிந்த இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி படு தோல்வியை சந்தித்தது.போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சியிலிருந்து வேட்பாளர்களும்,நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக, திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். 

செந்தில் பாலாஜி சென்றதிலிருந்தே  தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது  . தேர்தல் முடிவுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்வதால் அடுத்து என்ன செய்யலாம் ஆலோசித்து வந்துள்ள நேரத்தில் தினகரனுக்கு பெரும் இடியாக வந்து விழுந்தது  கிரேசி மோகனின் மரண செய்தி.

கடந்த ஜனவரி மாதம்  சென்னை அடையாறு இல்லத்தில் கழக துணை பொதுச்செயலாளர் திரு.TTV தினகரனை நகைச்சுவை நடிகரும் எழுத்தாளரும் நாடக வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் மற்றும் நடிகர் பாலாஜி ஆகியோர் இணைந்தனர்.

கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில்; "புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான திரு.கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன".

40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய திரு.மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான திரு.கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை  உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய திரு.மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது பதிவில் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக, திமுக கட்சியில் இணைந்து வருவதால் தொடர் இழப்பை சந்தித்துவரும் தினகரனுக்கு, கிரேசி மோகனின் மறைவு பெரும் இழப்பு தான். 

click me!