பாடபுத்தகத்தில் பகவத் கீதை.. பட்டு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய தேசிய லீக்.. தெறிக்கவிட்ட தடா ரகீம்.

Published : Mar 31, 2022, 03:38 PM IST
பாடபுத்தகத்தில் பகவத் கீதை.. பட்டு கம்பளம் விரித்து  வரவேற்கும் இந்திய தேசிய லீக்.. தெறிக்கவிட்ட தடா ரகீம்.

சுருக்கம்

பகவத் கீதை உட்பட புராணங்களை பாட திட்டத்தில் இருந்து நீக்கி ஜனநாயக கொள்கை முறையை பாட புத்தகத்தில் சேர்த்தனர் இன்று கல்வி காவிமயமாக்குவோம் , பகவத் கீதையை பாட புத்தகத்தில் இணைப்போம் என பூச்சாண்டி காட்டி  கூப்பாடு போடும் வரணாசிரம சனாதான ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது.

கல்வி காவிமயமாக்குவதும் , பகவத் கீதை உட்பட புராணங்களை பாட புத்தகத்தில் சேர்பதாலும் முஸ்லீகளுக்கு பாதிப்பில்லை என்பதினால், இந்திய தேசிய லீக் கட்சி இத்திட்டத்தை பட்டு கம்ளம் விரித்து வரவேற்கிறது என அந்த அமைப்பின் தலைவர் தடா ரஹூம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  

முகலாய மன்னர்கள் வருகைக்கு முன்பு இன்று ஆர்எஸ்எஸ் பாஜக கொண்டு வர துடிக்கும் கல்வி காவிமய (குல கல்வி) கொள்கை நடைமுறையில் இருந்தது. அதே போல பகவத் கீதை உட்பட புராணங்கள் அனைத்தும் பாட புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது ... 

அந்த காலத்தில் வர்ணசிரம்ம சனாதான கொள்கை படித்த மாணவர்கள் மனிதனுக்கு மனிதன் இவ்வளவு வேற்றுமையா என ஒவ்வொரு மாணவன் மனதிலும் கேள்வி எழுந்தது அந்த கேள்வியின் பரிணாம வளர்ச்சி படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கும் போய் சேர்ந்தது  ஆகையால் தான் முகலாய மன்னர்கள் வருகைக்கு பிறகு மனிதர்களில் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை யாரும் யாருக்கும் தாழ்ந்தவரும் இல்லை என்கிற இஸ்லாமிய கோட்பாட்டை மாணவர்கள் புரிந்து பெற்றோருக்கும் புரிய வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் எதிரொலியாக தான் காட்டு புஷ்பம் போல இந்தியாவில் இஸ்லாம் பரவியது இதை ஏற்றுக்கொள்ள முடியாத வர்ணாசிரம்ம சனாதான ஆர்எஸ்எஸ் கூட்டம் வாள் மூலம் இஸ்லாம் பரவியது என்கிற பொய் வரலாற்றைப் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். உதாரணமாக கூற வேண்டும் என்றால் உடன்கட்டை ஏறுதல் , விதவை மறுமணம் , மார்பக வரி , திறந்த மார்பகத்தை மூட வேண்டும் போன்ற சனாதான கொள்கை சார்ந்து விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிரான சட்டங்களை முகாலய மன்னர்கள் இயற்றினார்கள் ..

முகலாய ஆட்சிக்கு பிறகு வந்த ஆங்கிலேய ஆட்சியிலும் இது தொடர்ந்தது சுதந்திர இந்திய பிரகடனத்தை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு , படேல் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் இந்து மக்கள் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் மாற கூடாது என குல கல்வி (காவி மயமாக்கல்) மற்றும் பகவத் கீதை உட்பட புராணங்களை பாட திட்டத்தில் இருந்து நீக்கி ஜனநாயக கொள்கை முறையை பாட புத்தகத்தில் சேர்த்தனர் இன்று கல்வி காவிமயமாக்குவோம் , பகவத் கீதையை பாட புத்தகத்தில் இணைப்போம் என பூச்சாண்டி காட்டி  கூப்பாடு போடும் வரணாசிரம சனாதான ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது.ஆகையால் தான் நேரு படேல் ஆகியோரின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனமாக கடந்து விட்டனர் 

கல்வி காவிமயமாவது தவறில்லை என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கூறுவதையும் (குலக்கல்வி) கர்நாடக குஜராத் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் பாடபுத்தகத்தில் பகவத் கீதை சேர்ப்போம் என்பதையும் கண்டு முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகள் மலை மீது ஏறுவதாக நினைத்து பள்ளத்தில் விழுகின்றனர் 

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பகவத் கீதை உட்பட புராணங்களை படித்தால் தான் வரணாசிரம்ம சனாதான கொள்கை மனிதனுக்கு மனிதன்  எவ்வளவு ஏற்றத்தாழ்வு கற்பித்து உள்ளது என உணர்ந்து கொள்வார்கள். ஆகையால் கல்வி காவிமயமாக்குவதும் பாட புத்தகத்தில் பகவத் கீதை உட்பட புராணங்களை சேர்ப்பதில் முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் இந்திய தேசிய லீக் கட்சி பட்டுக்கம்ளம் விரித்து வரவேற்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி