சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடம்... பினராய் விஜயனையே பின்னுக்குத் தள்ளிய ஸ்டாலின்....!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 16, 2021, 6:24 PM IST
Highlights

இப்படி அதிரடி முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளால் மக்களைக் கவர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் முதலாவதானவராக பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதலே அதிரடிகளுக்கு குறைவில்லை என்றே சொல்ல வேண்டும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மாசனம் ஏறிய திமுகவையும், முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற தன்னையும் மக்கள் புகழ்ந்து வாழ்த்தும் படி முதல் நாளே 5 அசத்தலான கோப்புகளில் கையெழுத்திட்டார் ஸ்டாலின். 

கொரோனா நிவாரணமாக ரூ.4000, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் என முதல் நாளே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தினார். 

பத்திரிகையாளரை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பணி நியமனம், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு +2ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து என முதல்வரின் அதிரடி அறிவிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பிறப்பித்தது, தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டர், கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம், கார் ஆம்புலன்ஸ் சேவை என்றும் தனி கவனம் செலுத்தி, தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்தை கணிசமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இப்படி அதிரடி முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளால் மக்களைக் கவர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவில் டாப் 10 முதல்வர்களில் முதலாவதானவராக பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது. கிரெளட் விஸ்டம் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவிலேயே டாப் 10 முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த முறை கொரோனா நடவடிக்கைகளால் பெரிதும் பேசப்பட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!