அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்சு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 9, 2020, 10:22 AM IST
Highlights

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.இது அக்கட்சியினரிடையை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

T.Balamurukan

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.இது அக்கட்சியினரிடையை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும், செனட் சபை எம்.பி. பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை ரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ் இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கும்,ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளது.

click me!