அடுத்த வாரத்தில் படுக்கை தட்டுப்பாடு நீங்கும்.. ஆக்சிஜன் பற்றாக்குறை போக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் மா.சு

By Ezhilarasan BabuFirst Published May 18, 2021, 3:26 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆக்சிசன் தட்டுபாடு நிலவி வருகிறது, தடை இல்லாமல் ஆக்சிசன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆக்சிசன் தட்டுபாடு நிலவி வருகிறது, தடை இல்லாமல் ஆக்சிசன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் திமுக கட்சி அலுவலகத்தில் மாற்று காட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்: 

தமிழகத்தில் குடிசைமாற்று வாரிய பகுதி அதே போன்று சிறிய வீடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ள நபர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், ஒரே அறையில் இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 15 மருத்துவர்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்கும் பணியும் துவங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அடுத்த வாரத்தில் இருந்து படுக்கை தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

நேற்று மதுரையில் ஆக்சிசன் தட்டுபாடு ஏற்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஆக்சிசன் உற்பத்தி 400 மெட்ரிக் டன் ஆனால் தேவை 470 ஆக உள்ளது, எனவே மற்ற மாநிலங்களில் இருந்து பெற்று வருகிறோம் என்றும், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஆக்சிசன் தட்டுபாடு நிலவி வருகிறது, தடை இல்லாமல் ஆக்சிசன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
 

click me!