கொரோனா 3வது அலை கட்டாயம் வருமாம்... கோட்டை விட்டுவிடாமல் அலர்ட்டா இருங்க.. பாஜகவை சாடும் ராகுல்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2021, 2:14 PM IST
Highlights

முதலாவது தாக்கிய வைரஸை விட 2வது தாக்கிய கொரோனா வைரஸ் புத்திசாலித்தனமானது என்பதால் சேதம் அதிகமாக இருந்தது. கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கொரோனாவின் முதல் அவை, 2வது அலைகளை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லியில் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி;- 2வது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்த பிறகும்  ஒன்றிய அரசு மிக மோசமான முறையில் எதிர்கொண்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவி அளிப்பது மிக முக்கியமானதாகும். கொரோனா உயிரிழப்புக்கள் அரசு கூறுவதை விட ஐந்திலிருந்து ஆறு மடங்கு அதிகமாக இருக்கும் என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், உயிரிழப்பை மறைப்பதால் பாதிக்கப்பட்டவர்களால் எளிய நிவாரண உதவியை பெற முடியாத நிலை ஏற்படும். முதலாவது தாக்கிய வைரஸை விட 2வது தாக்கிய கொரோனா வைரஸ் புத்திசாலித்தனமானது என்பதால் சேதம் அதிகமாக இருந்தது. கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 2வது அலையைக் கட்டுப்படுத்தாததால் வீணாக பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாக ராகுல் வேதனையுடன் தெரிவித்தார்.

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள அரசு என்ன செய்துள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.  நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பாஜக ஆளும் மாநிலம், பாஜக ஆளாத மாநிலம் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்கள் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டதாக காட்டுவதற்கு  ஒன்றிய அரசு முயற்சிப்பது சரியல்ல என  கூறியுள்ளார். 

குறிப்பாக மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது, பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியவில்லை. பிரதமரின் கண்ணீர் கொரோனாவால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது. அவுர்களை காப்பாற்றாது. ஆனால், பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், மேற்கு வங்க தேர்தலில் கவனம் செலுத்தினார் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
 

click me!