ஊருக்கே நல்லது செய்யும் முதல்வரய்யா எங்களையும் பாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 10:54 AM IST
Highlights

சலூன் கடைகள் மூடியிருப்பதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக கடைகளை திறக்காவிட்டால்,  சிறிய அளவிலான சலூன் கடை களை வைத்திருப்பவர்கள் நிலைமை ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்படுவர், 

அனைத்து சாராருக்கும் அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு தங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. வரும் 14ம் தேதியுடன் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகள் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் செல்வராஜ்,

 

சலூன் கடைகள் மூடியிருப்பதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக கடைகளை திறக்காவிட்டால்,  சிறிய அளவிலான சலூன் கடை களை வைத்திருப்பவர்கள் நிலைமை ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்படுவர், இப்போதே அவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்வும்,  அதேபோல பதவியேற்று ஒரு மாதத்தில் அதிரடியாக செயல்பட்டு வரும் முதல்வர் தலைமையிலான ஆட்சி தங்கள் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

மேலும் இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு தங்களது சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் முதல்வருக்கும் துறை சார்ந்த அமைச்சரான தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கு மனு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா குறைந்தாலும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் குறையாத காரணத்தால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!