திரெளபதி படத்தை தடை செய்யுங்கள்... திகைக்க விடும் திக., கி.வீரமணி..!

By Thiraviaraj RM  |  First Published Jan 6, 2020, 1:50 PM IST

திரெளபதி படத்திற்கு தடை கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். 


பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் இரண்டாவது படமான திரெளபதி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு சாதியினர் நடத்தும் நாடகக் காதலை படமாக்கி இருப்பதாக படக்குழு விளக்கம் அளித்தது.

 

Latest Videos

undefined

அத்துடன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பை சுட்டிக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனால் மற்றொரு தரப்பு அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனால் திரெளபதி படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. வழக்கை எதிர்கொண்டு படக்குழு திரைப்படத்தை ரிலீஸ் செய்யுமா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரெளபதி திரைப்படம் பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், போலி பதிவு திருமணம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் திரௌபதி என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். 

click me!