நஷ்டத்தில் இயங்கும் 36 வங்கிகள்…… பெரிய  முதலாளிகள் ஏமாத்திட்டு போன வராகடன் எவ்வளவு தெரியுமா ?

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 08:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
நஷ்டத்தில் இயங்கும் 36 வங்கிகள்…… பெரிய  முதலாளிகள் ஏமாத்திட்டு போன வராகடன் எவ்வளவு தெரியுமா ?

சுருக்கம்

bad for 36 banks will be increased 1o lakhs crore

இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட 38 வங்கிகளின் மொத்த வராக் கடன், 2018 ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் கடந்த வாரம் வரையில் 26 வங்கிகள், தங்களது ஜனவரி - மார்ச் காலாண்டுவருவாய் விவரங்களை வெளி யிட்டிருந்தன. அதில் இந்த வங்கிகளின் மொத்த வராக் கடன் ரூ. 7 லட்சத்து 31 ஆயிரம் கோடியாக இருந்தது.

தற்போது, ஆந்திர வங்கி, கரூர் வைஸ்யா உள்ளிட்ட மீதமுள்ள 12 வங்கிகளும் தங்களது காலாண்டுவருவாய் விவரங்களை வெளி யிட்டதைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 38 வங்கிகளின் வராக் கடன் அளவு ரூ. 10 லட்சத்து 17 ஆயிரம் கோடி ஆகியுள்ளது.

2016 மார்ச் வரையிலான ஐந்து ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் இணைந்து மொத்தம் ரூ. 2 லட்சத்து 25ஆயிரம் கோடி வராக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரையில் கடந்த 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே வருவாய் ஈட்டியிருந்தன. விஜயா வங்கி ரூ. 727 கோடியும், இந்தியன் வங்கி ரூ. ஆயிரத்து 258 கோடியே 99 லட்சமும் வருவாய் ஈட்டியுள்ளன.

இந்த இரு வங்கிகளைத் தவிர மற்ற 19 வங்கிகளும் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது, ரூ. 6 ஆயிரத்து 547 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

நீரவ் மோடியால் ரூ.13,700 கோடி நிதி மோசடிக்கு உள்ளான பஞ்சாப் நேசனல் வங்கி ரூ. 12 ஆயிரத்து 282 கோடியே 82 லட்சம் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!