மஞ்சள் துண்டு அணிந்தவரெல்லாம் தலைவர் ஆகமுடியுமா? என்றும் ஒரே சூரியன் தான். பார்த்திபனுக்கு பதிலடி கொடுத்த அஞ்சாநெஞ்சன்!!!

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 26, 2018, 1:00 PM IST
Highlights

ஸ்டாலின் அவர்களை திமுகவின் கலங்கரை விளக்கம் என்று புகழாரம் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் திமுக இருக்க வேண்டுமென்றால் தலைவராக ஸ்டாலின் இருக்க வேண்டுமென்றும் விழா மேடையில் தெரிவித்தார் பார்த்திபன். 

நேற்று கலைஞர் புகழுக்கு வணக்கம் செலுத்துவதற்காக திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து கோவையில் "மறக்கமுடியுமா கலைஞரை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் அவருடைய தோரணையில் கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் செலுத்தினார்.

கலைஞருக்கு சூரிய வணக்கம் என்று தான் தன்னுடைய உரையையே தொடங்கிய நடிகர் பார்த்திபன், சூரியனுக்கு நிகரான அறிவாற்றல் மிக்க கலைஞர். அதனால் தான் நான் சூரிய வணக்கம் என்று கூறினேன் என்று பார்த்திபன் அவருடைய தோரணையில் தன்னுடைய உரையை தொடர்ந்தார். மேலும்,

எழுந்தால் விட்டம் தொடுவார், எழுத்தால் விண்ணை தொடுவார். என்று கலைஞரின் எழுத்து புகழ் குறித்து பேச ஆரம்பித்த பார்த்திபன் தமிழ் எனக்கு உயிர் போன்றது, அவர் இறந்ததால் தமிழுக்கே உயிர் போனது. என்று கலைஞரின் புகழ் குறித்து பேசிய நடிகர் பார்த்திபன். அதன் பிறகு ஸ்டாலின் அவர்கள் குறித்து பேச ஆரம்பித்தார். ஸ்டாலின் அவர்களை திமுகவின் கலங்கரை விளக்கம் என்று புகழாரம் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் திமுக இருக்க வேண்டுமென்றால் தலைவராக ஸ்டாலின் இருக்க வேண்டுமென்றும் விழா மேடையில் தெரிவித்தார் பார்த்திபன். 

அதன் பிறகு, ஸ்டாலின் அவரைகளை மேடைக்கு அழைத்து கலைஞர் கருணாநிதி அவர்களின் அடையாளமான மஞ்சள் துண்டை ஸ்டாலினுக்கு அணிவித்தார் பார்த்திபன். அதன் பிறகு, நான் கோடி வார்த்தை பேசுவதற்கு பதிலாக இந்த ஒற்றை மஞ்சள் துண்டு உங்களுக்கு பல கோடி அர்த்தங்களை தந்திருக்கும் என்று கூறிய பார்த்திபன். ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் எனவும், நான் காட்சி சார்பற்றவன் எனவே நான் கூறுவது மனதில் இருந்து கூறுவது என்று கூறி அமர்ந்துவிட்டார்.

இதன் பிறகு, இவ்வாறு பேசிய பார்த்திபனுக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அழகிரி சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில்,
'மஞ்சள் துண்டு அணிந்தவரெல்லாம் தலைவர் ஆகமுடியுமா? என்றும் ஒரே சூரியன், ஒரே தலைவர், டாக்டர் கலைஞர்' இவ்வாறு கூறியுள்ளார். 

click me!