"கேவலமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" - ஹெச்.ராஜாவை கண்டித்த அய்யாக்கண்ணு

 
Published : May 01, 2017, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
"கேவலமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" - ஹெச்.ராஜாவை கண்டித்த அய்யாக்கண்ணு

சுருக்கம்

ayyakannu condemns raja

தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி கேவலமாக சித்தரிக்கிறார் ஹெச்.ராஜா என தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு இடங்களுக்கு செல்லும் மோடிக்கு விவசாயிகள் பிரச்சனையை கேட்க நேரமில்லை.

இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வந்தார்.

அதன்படி விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் தன் இழிவான பேச்சை துவங்கியுள்ளார். டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணுவுக்கு தீவிரவாதி அப்சல் குரூபுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹெச். ராஜாவுக்கு அய்யாக்கண்ணு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், வெளிமாநிலத்தில் இருந்து வரும் ஹெச் ராஜா எதை வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார்.

தமிழ்நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் இளிச்சவாயங்கனு நினைச்சிட்டு இருக்காரா? காதுல பூ சுத்தி இருக்கோமா?

ஹெச்.ராஜா அளந்து பேச வேண்டும் இல்லையென்றால் அவருக்கு நல்லது அல்ல.

இதனால் தான் அவர் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கும் கெட்டப்பெயர். கேவலமாக பேசுவதை ஹெச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!