94 வயதில் வாடகை வீட்டிலிருந்து எடப்பாடி அரசால் வெளியேற்றப்பட்ட அய்யா நல்லகண்ணு...

By Muthurama LingamFirst Published May 11, 2019, 3:18 PM IST
Highlights

உற்றார், உறவினர் பினாமிகளின் கணக்குகளில் தனக்கு எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு சொத்து இருக்கிறது என்றே தெரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் குடியிருந்த வாடகை வீட்டையும் விட்டு வெளியேறி அடுத்து தங்க இடமின்றி தவித்து நிற்கிறார் அய்யா நல்லகண்ணு.
 

உற்றார், உறவினர் பினாமிகளின் கணக்குகளில் தனக்கு எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு சொத்து இருக்கிறது என்றே தெரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் குடியிருந்த வாடகை வீட்டையும் விட்டு வெளியேறி அடுத்து தங்க இடமின்றி தவித்து நிற்கிறார் அய்யா நல்லகண்ணு.

...சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது பழுத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.

சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் நல்லகண்ணுவும் வெளியேறினார்.

#அய்யா நல்லக்கண்ணு அவர்களுக்கு 
சொந்த வீடில்லை !...[சந்திரன் வீராசாமி அவர்கள் தனது முகநூல் பதிவில்] 

அய்யா நல்லகண்ணுவின் வாடகை வீட்டு விவகாரம் தற்போது வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்’என்று நெடுமாறன் அந்த அறிக்கையில் குறி[ப்பிட்டுள்ளார்.

click me!