திராவிட முறுக்கோடு திருஷ்டி பூசணியை எதிர்கொள்ளும் தி.மு.க. மகேஷ்... பெரியாரிஸத்துக்கு லீவு போட்ட அமர்க்களம்!

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 5:10 PM IST
Highlights

ஸ்டாலினை ‘பெரியப்பா’ என்று அவரது குடும்பத்தை சாராத ஒரு நபர் விளிக்கிறார்! துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர்!, யார் தெரியுமா? எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழிதான் அவர்.

ஸ்டாலினை ‘பெரியப்பா’ என்று அவரது குடும்பத்தை சாராத ஒரு நபர் விளிக்கிறார்! துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர்!, யார் தெரியுமா? எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழிதான் அவர். ஸ்டாலினின் மனசாட்சியாகவே வாழ்ந்த அவரது நம்பிக்கை நண்பர் அன்பில் பொய்யாமொழியின்  மகன் தான் மகேஷ். இவருக்கு ஸ்டாலினின் குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு. 

தலைவரின் மகன் உதயநிதியின் ரசிகர் மன்றத்தின் நகர்வுகளை கவனிப்பதும் இவர்தான், தலைவரின் மருமகன் சபரீசனோடு அமர்ந்து ஸ்டாலினின் ப்ரோக்ராம்களுக்கு ஸ்கெட்ச் போடுவதும் இவர்தான், ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் பள்ளி தொடர்பான ஆவண விவகாரங்களுக்கு தீர்வு தேடுவதும் இவர்தான், ஸ்டாலினின் மருகமகள் கிருத்திகாவின் புதிய படங்களுக்கான பணிகளில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் வந்தால் கிளியர் பண்ணுவதும் அண்ணன் தான். இப்படி தலைவர் ஸ்டாலினின் வீட்டில் ஆல் இன் ஆல் ஆக வலம் வருகிறார் மகேஷ். 

சில மாவட்ட விழாக்களில் ஸ்டாலினின் நிழலாகவே நிற்கிறார். இப்படி ஸ்டாலின் குடும்ப அங்கமாகவே மாறிவிட்டதாலோ என்னவோ, அக்குடும்பத்தினரைப் போலவே ’ஊருக்கு நாத்திகம், உள்ளுக்குள் ஆத்திகம்.’ என்று மகேஷும் வாழ துவங்கிவிட்டார். சகுனங்கள், ஜாதகங்கள், கடவுள்கள், பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் ‘அடி முட்டாள்தனம்.’ என்று பெரியாரின் பெருந்தாடியை பிடித்து தொங்கியபடி விமர்சிப்பது கருணாநிதி மற்றும் அவர் வழி வந்திருக்கும் ஸ்டாலினின் குணம். 

ஆனால் ஸ்டாலினின் மனைவி துர்கா கோவில் கோவிலாய் வலம் வருவார், ஸ்டாலின் தம்பி தமிழரசு குலதெய்வ வழிபாட்டில் உருகுவார். அந்த குடும்பத்துடனே ஒட்டி உறவாடுவதாலோ என்னவோ மகேஷுக்கும் இந்த ஸ்டைல் ஒட்டியிருக்கிறது. கழக மேடைகளில் திராவிடத்தையும், கலைஞர் காட்டிய பெரியாரிஸத்தையும் பேசுபவர் தன் தனிப்பட்ட வாழ்வில் எதிர்மறையாய் இருக்கிறார். 

நாடெங்கும் ஆயுத பூஜை வழிபாடு கலகலவென கரைபுரண்டு கொண்டிருக்கும் நிலையில், அன்பில் மகேஷும் தன் காரைகழுவி சுத்தம் செய்து அதற்கு படையலிட்டு, பூஜை செய்து, திருஷ்டி சுற்றுகையில் தானும் காரோடு நின்று திருஷ்டி சுற்றிக் கொண்டு பூசணி உடைத்திருக்கிறார். TN09 CC 4567 எனும் செம்ம பேன்ஸி எண் உடைய,  சென்னை பதிவெண் கொண்ட அந்த காரின் முன் மகேஷ் பொய்யாமொழி திராவிட முறுக்கோடு நின்று பூசணியை எதிர்கொள்ளும் அழகிருக்கிருக்கிறதே அடடா! அடடா! சும்மாவே வாயை மெல்லும் நெட்டிசன்களுக்கு அதெப்டிங்ணா அவல்,பொரி,கடலைகளை அள்ளியள்ளி கொடுக்குறீங்க?

click me!