முதல்வர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Jan 04, 2021, 03:27 PM ISTUpdated : Jan 04, 2021, 03:31 PM IST
முதல்வர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அதிமுகவை  சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகிறார். இவர் கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் கண்டறியப்பட்ட நாள் முதலே தொகுதிக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்