சி.வி.சண்முகம் வீடு மீது கல்வீச்சு - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

 
Published : Feb 16, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சி.வி.சண்முகம் வீடு மீது கல்வீச்சு - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்

சுருக்கம்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கான குடியிருப்பு பகுதிகள் உள்ளது.

இங்குதான் மதியம் வரை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸின் வீடு உள்ளது.

ஓபிஎஸ் வீட்டுக்கு நேர் எதிர் வீடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடாகும்.

ஓபிஎஸ் பதவியிழந்துள்ள நிலையில் ஏரளமான ஆதரவாளர்கள் அவரது வீடு முன் திரண்டிருந்தனர்.

அப்போது சி.வி.சண்முகத்தின் மகன் அங்கு வந்து அவர்களை விரட்டியதாக தெரிகிறது.

இதனால் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சி.வி சண்முகத்தின் வீட்டின் மீது சரமரியாக கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.

இதில் எதிர்த்தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஓபிஎஸ் ஆதரவளர்கள் பலர் காயமடைந்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் உடனடியாக அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி "ஓபிஎஸ் பதவியிழந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அவர்களது வேலையே காட்டியிருக்கிறார்கள் என சாடினார். தர்ம யுத்தம் நாங்க நடத்த தான் போகிறோம். அது சி.வி.சண்முகத்தை எதிர்த்து அல்ல. நீங்கள் வெறும் அம்புதான். தர்ம யுத்தம் சசிகலா குடும்பத்துக்கு எதிரானது.சசிகலா குடும்பத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான வேளைகளில் ஈடுபடவேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

கேபி முனுசாமி பேசி கொண்டிருக்கும்போதே சிவி சண்முகம் ஆதரவளர்கள் கற்களை வீசினர். அப்போது போலீஸ் காவலர் ஒருவரும் காயமடைந்தார்.

ஓபிஎஸ் பதவியிழந்த 1 மணி நேரதுக்களாகவே சசிகலா தரப்பு தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு