கம்பீர் இப்படிப்பட்டவரா..? பாலியல் புகாரை கிளப்பி அதிர வைக்கும் பெண் வேட்பாளர்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2019, 5:34 PM IST
Highlights

பாலியல் ரீதியாக தரக்குறைவான வகையில் கம்பீர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் அதிஷி பரபரப்பு புகாரை கிளப்பி உள்ளார். 

பாலியல் ரீதியாக தரக்குறைவான வகையில் கம்பீர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் அதிஷி பரபரப்பு புகாரை கிளப்பி உள்ளார்.

 

ஆம் ஆத்மி கட்சி சார்பில், கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் அதிஷி. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி,  ’என்னைப் பற்றி பாலியல் ரீதியாக தரக்குறைவான வகையில் கம்பீர் துண்டறிக்கை வெளியிட்டுள்ளாட். கம்பீருக்கு ஒரேயொரு கேள்விதான். ஒரேயொரு பெண்ணுக்கு எதிராக கம்பீர் இப்படி செய்ய முடியும் என்றால், கிழக்கு டெல்லியில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் நிலைமை என்னவாகும்” என்று கேள்வி எழுப்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். 

I abhor your act of outraging a woman’s modesty and that too your own colleague. And all this for winning elections? U r filth Mr CM and someone needs ur very own झाड़ू to clean ur dirty mind.

— Chowkidar Gautam Gambhir (@GautamGambhir)

 

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இப்படிப்பட்டவர்கள் பதவிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும். அதிஷி, தைரியமாக இருங்கள். இது உங்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் போன்றவர்களுக்கு எதிராகத்தான் நாம் போராட வேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், “நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுத்தால் தேர்தலில் இருந்து விலகத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.  

My Challenge no.2
I declare that if its proven that I did it, I will withdraw my candidature right now. If not, will u quit politics?

— Chowkidar Gautam Gambhir (@GautamGambhir)

 

இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள கம்பீர், தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்பட்டால், எனது வேட்பு மனுவை இப்போதே வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அப்படியில்லை என்றால், அரசியலில் இருந்து விலக நீங்கள் தயாரா” என்று கேட்டுள்ளார். 
 

click me!