நம்ப வச்சு கழுத்தறுத்த அதிமுகவை தோற்கடிச்சே தீரனும்... ஏமாற்றத்தால் கொந்தளிக்கும் கருணாஸ்...!

By vinoth kumarFirst Published Mar 16, 2021, 2:31 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி கூட்டணியிலிருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து, திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கருணாஸ் கடிதம் அனுப்பினார். ஆனால், திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கொடுத்த ஆதரவை கருணாஸ் வாபஸ் பெற்றார்.  பின்னர், அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் அழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்றுள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. 

மாறாக 234 தொகுதிகளில் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை, அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்கள் ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது. அதிமுகவை தோற்கடிக்க அந்தந்த  தொகுதிகளில் களநிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது. மொத்தத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட முக்குலத்தோர் மக்களின் இழந்த மரியாதையை பெற அதிமுகவை தோற்கடிக்கப் படவேண்டும் என்பது முக்குலத்தோர் புலிப்படையின் இலக்கு என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

click me!