காசு வாங்கிணு எதற்கான ஆட்களை கூட்டுட்டு வரல... பெண் நிர்வாகியின் மண்டை உடைத்த பாஜகவினர்.. கொதிக்கும் வன்னியரசு

Published : Jan 25, 2024, 06:50 AM ISTUpdated : Jan 25, 2024, 07:34 AM IST
காசு வாங்கிணு எதற்கான ஆட்களை கூட்டுட்டு வரல... பெண் நிர்வாகியின் மண்டை உடைத்த பாஜகவினர்.. கொதிக்கும் வன்னியரசு

சுருக்கம்

இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் ஆட்களைத் திரட்ட லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சித்ரா சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வர தொடர்பாக ஆண்டாளுக்கும், பாஜகவின் இன்னொரு நிர்வாகி நிவேதா என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை கொடூரமாக தாக்கிய பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள், பாஜக மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை துவங்கி வைக்க வருவதை தந்தார். அப்போது பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஆட்களைத் திரட்ட சென்னை பெருங்கோட்ட பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறோ, சட்ட அறிவோ கிடையாது - ஹெச்.ராஜா விமர்சனம்

இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் ஆட்களைத் திரட்ட லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சித்ரா சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வர தொடர்பாக ஆண்டாளுக்கும், பாஜகவின் இன்னொரு நிர்வாகி நிவேதா என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 21-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர், ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், அவரது தங்கை ஆண்டாளையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தேவியின் மண்டை உடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் வன்னியரசு கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  மாணவி ரேகாவை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.! திமுக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த எடப்பாடி

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பாஜக எனும் சமூகவிரோத கட்சியில் அமர் பிரசாத் ரெட்டி எனும் சமூகவிரோதியின் ரவுடித்தனம்.

சென்னை- கோட்டூர் புரத்தைச்சார்ந்த தேவி என்பவரின் தங்கை ஆண்டாளிடம் 50,000 ரூபாய் கொடுத்துள்ளார் பாஜக அமர் பிரசாத் என்பவர். எதற்காகவெனில், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க ஆட்களை கூட்டி வருவதற்காக. ஆனால், ஆண்டாள் அவர்கள் கூட்டி வரவில்லையாம். அதற்காக அமர் பிரசாத் தலைமையிலான ரவுடிக்கும்பல் ஆண்டாள் வீட்டுக்கு போயுள்ளது.

 

அங்கு ஆண்டாள் சகோதரி தேவி இருந்துள்ளார். அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளது பாஜக ரவுடிக்கும்பல். கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உடனடியாக பாஜக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வன்னியரசு வலியுறுத்திள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உன்ன விட பெரிய ஆளை எல்லாம் பாத்தாச்சு..! அமித் ஷாவுக்கு நேரடி சவால் விட்ட வைகோ
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறலாம்... தேதியை அறிவித்த அதிமுக..!