அரசியல் கட்சி முடிவுக்கு தடா..! ரஜினி முடிவை முன்பே கூறிய ஏசியா நெட் தமிழ்..! அடுத்தது என்ன?

By Selva KathirFirst Published Oct 30, 2020, 11:36 AM IST
Highlights

உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்கும் முடிவை ரஜினி ஏறக்குறைய கைவிட்டுவிட்டதாக நேற்று ஆசியா நெட் தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது நேற்றைய ரஜினியின் ட்வீட்.

உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்கும் முடிவை ரஜினி ஏறக்குறைய கைவிட்டுவிட்டதாக நேற்று ஆசியா நெட் தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது நேற்றைய ரஜினியின் ட்வீட்.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினி. 2021 சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று ஆவேசமாக அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால் அதற்கு அப்போது முதலே ரஜினி ரசிகர்கள் மத்தியில் தான் எதிர்பார்ப்பு காணப்பட்டது. பொதுமக்களில் யாரும் பெரிய அளவில் அதனை கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் ரஜினி வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொண்டார். களத்திற்கு வரவில்லை.

களத்திற்கு வராமல் வெறும் அறிக்கை பேட்டியில் மட்டுமே ரஜினி அரசியல் செய்து கொண்டிருந்த காரணத்தினால் அவரது அரசியல் பிரவேசம் சந்தேக கண்ணோடு தான் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் திடீரென செய்தியாளர்களை அழைத்து தனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை, மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியல் கட்சி என்று அந்தர் பல்டி அடித்திருந்தார் ரஜினி. இதனை தொடர்ந்து ரஜினி அரசியல் பிரவேசம் என்பது முழுக்க முழுக்க கேள்விக்குறியானது.

சொல்லப்போனால் அரசியல் பிரவேசம் எனும் அறிவிப்பில் இருந்து எப்படி பின்வாங்குவது என்றே ரஜினி யோசிக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். இதற்கிடையே கொரோனா சூழலில் படப்பிடிற்கு கூட செல்ல ரஜினி யோசிக்கும் நிலையில் அரசியல் கட்சி துவங்க வாய்ப்பே இல்லை என்று நேற்று முன் தினம் ஏசியாநெட் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் ரஜினிக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்கிற நிலையில் அரசியல் செயல்பாடுகள் எப்படி சாத்தியமாகும் என்றும் ஏசியாநெட் தமிழ் சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் ரஜினியின் நேரடி அரசியல் பிரவேசம் என்பது கிட்டத்தட்ட காணல் நீர் தான் என்பதையும் ஏசியா நெட் தமிழ் குறிப்பிட தவறவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் நமது கட்டுரை வெளியான பிறகு அதனை தழுவி ரஜினி பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் கொரோனாவை மீறி பொது இடங்களுக்கு வருவது தனத உயிருக்கே ஆபத்து என்பதால் அரசியல் முடிவை கைவிடுவதாக ரஜினி முடிவெடுத்துள்ளார் என்பது போன்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று ரஜினி வெளியிட்ட ட்வீட் நமது கட்டுரையில் இருந்த ஒவ்வொரு அம்சத்தையும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதாவது நாம் ரஜினியின் உடல்நிலை கொரோனா சூழலில் அரசியலுக்கு ஒத்துழைக்காது என்று கூறியிருந்தோம். அதனை ரஜினி தனது ட்வீட்டில் ஆமோதித்திருந்தார். என்ன அரசியல் பிரவேசம் என்பது கானல் நீராகிவிட்டது என்று நாம் கூறியிருந்தோம், அதனை வெளிப்படையாக கூறாமல் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பு என்று தெரிவித்துள்ளார்.

இது கிட்டத்தட்ட அரசியல் வேண்டாம் என்று எடுக்கப்போகும் முடிவுக்கான முன்னோட்டம் தான் என்கிறார்கள். ஏனென்றால் இனி கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது என்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று ரஜினி புரிந்து வைத்துள்ளார். மேலும் இந்த கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்குள் ஏற்கனவே விட்ட பாதி காலை வெளியே எடுத்துவிட அவர் தீர்மானித்துவிட்டார். எனவே உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக ரஜினி எந்த நேரத்திலும் அறிவிப்பார் என்கிறார்கள்.

ஆனால் ரஜினி வழக்கம் போல் சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சி அல்லது ஒரு கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க மூன்றாவது அணி போன்ற ஒன்றை உருவாக்கி அந்த கூட்டணிக்கு வாய்ஸ் கொடுக்க ரஜினியிடம் டெல்லியில் இருந்து ஒரு லாபி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.

click me!