அன்றே சொன்னார் தினகரன்...! ஆர்.கே.நகரில் இன்று விஷால்..சிதறும் வாக்குகள்...பின்னணி என்ன..?

 
Published : Dec 02, 2017, 07:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
அன்றே சொன்னார் தினகரன்...! ஆர்.கே.நகரில் இன்று விஷால்..சிதறும் வாக்குகள்...பின்னணி என்ன..?

சுருக்கம்

AS PER DINAKARAN WISH ACTOR VISHAL ENTERED IN POLITICS

நடிகர்  விஷால் ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதாக தற்போது  அதிகாரபூரவ்மாக அறிவித்து உள்ளார்.

இதற்கு முன்னதாகஆர். கே நகரில்  போட்டியிடுவதாக  வந்த தகவலையடுத்து  அவரிடம்  கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த  விஷால்,தற்போது அதிகாரபூர்வமாக  அறிவித்து உள்ளார்

கமலுக்கு முன்பே தனது நேரடி அரசியலில் குதித்த நடிகர் விஷாலுக்கு,திரை உலகினர்  மற்றும் நண்பர்கள்  வாழ்த்து  தெரிவித்து உள்ளனர்  

ஆர். கே நகர் இடைதேர்தலில்  நடிகர் விஷாலும் போட்டியிடுகிறார் என்பதை விட,இவர் டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருங்கியவர் என்றே கூறலாம்.

அதிமுக எடப்பாடியும், தினகரனும் எதிரும் புதிருமாக இருக்கும் சமயத்தில்,நடிகர் விஷால், தன்னுடைய தங்கையின் திருமணத்திற்காக நேரடியாக  தினகரனை சந்தித்துஅழைப்பு விடுத்தது இருந்தார்.தினகரனும் திருமணத்திற்கு நேரடியாக சென்று தம்பதிகளை வாழ்த்தினார்.

 விஷால் பிறந்தநாள்

விஷால் பிறந்த நாளுக்கும் தினகரன் நேரில் சென்று வாழ்த்து  தெரிவித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது . அப்போது  செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "தம்பி  விஷால் அரசியலுக்கு  வந்தால்  வரவேற்கிறோம்" என தெரிவித்து  இருந்தார்.அன்று தினகரன் சொன்னது போலவே  இன்று அரசியலில்  குதித்து  உள்ளார் விஷால்,ஆனால் அதே  ஆர்.கே நகர் தேர்தலில் தினகரனும் வேட்பாளராக  இருப்பதால்,மற்ற  கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி  தினகரனுக்கும் போட்டியாக விஷால் உள்ளாரா என்று தான் நினைக்க தோன்றும்..

ஆனால்,திமுக அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிகை சற்று குறையும் என்றே சொல்லலாம்.. விஷால் போட்டியிடுவதால்,திமுக மற்றும் அதிமுக விற்கு கிடைக்கக்கூடிய ஓட்டுகளில், சொற்ப எண்ணிகையிலான ஓட்டுகள் விஷாலுக்கு  கிடைக்கும்....அதாவது வாக்குகள் சிதற வாய்ப்பு உண்டு.....

வாக்குகள் சிதற வைக்க தினகரன்  இதற்கு பின்னணியாக  இருப்பதாக  தகவல்  வெளியாகி உள்ளது.அதாவது அண்ணன் தினகரன் அன்று சொன்னபடியே தம்பி விஷால் இன்று அரசியலில் குதித்து  உள்ளார் 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!