"ஜனாதிபதி ஆட்சி மட்டுமே தீர்வு" - அரவிந்த் சாமியின் ஐடியா

 
Published : Feb 10, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"ஜனாதிபதி ஆட்சி மட்டுமே தீர்வு" - அரவிந்த் சாமியின் ஐடியா

சுருக்கம்

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தீர குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, மறு தேர்தலை நடத்துவது தான் என்று நடிகர்அரவிந்த் சாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து, முதல்வராக அமர்த்த உள்ளனர். 

அதே சமயம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி,  முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியினர் செயல்படுகின்றனர். இருபிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்த யார் ஆட்சி அமையும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான அரசியல் சூழல் குறித்து பல்வேறு நடிகர்,நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் அரவிந்த் சாமி டுவிட்டரில்வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது-

எம்.எல்.ஏ.க்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும்.  இப்போதுள்ள அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றச்சாட்டுகள், அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பது இவை எல்லாம், நம்பிக்கை வாக்கு எடுப்பு நடக்கும் போது சரியான அறிகுறியாக இருக்குமா?.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசில் சூழலுக்கு தீர்வு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, மறு தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு