பாஜகவுக்கு மரண பயத்தை காட்டிய கெஜ்ரிவால்... 16-ம் தேதி பதவியேற்பு விழாவுக்கு செல்கிறார் மோடி..?

By vinoth kumarFirst Published Feb 12, 2020, 11:21 AM IST
Highlights

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு சீட்கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார். 

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஒரு சீட்கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். அதன்பின்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அப்போது கெஜ்ரிவால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வராக 3-வது முறையாக வரும் 16-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்,  பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!