“எந்த கட்சித் தலைவருக்கும் அழைப்பில்லை: ஒருவருக்கு மட்டும் அழைப்பு”.. பதவியேற்பு விழாவில் கேஜ்ரிவால் புரட்சி

By Asianet TamilFirst Published Feb 14, 2020, 4:52 PM IST
Highlights

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 16-ம் தேதி நடைபெறும் விழாவில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த விழாவுக்கு எந்தகட்சியின் அரசியல்தலைவர்களுக்கும் அழைப்பில்லை, மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஆம்ஆத்மி கட்சித் தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸுக்கு கடந்த தோ்தலைப் போலவே ஓா் இடம்கூடக் கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதல்வா் பதவியை ஏற்கவுள்ளாா்.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் கோபால் ராய் கூறுகையில், ‘டெல்லியை நடைபெறும் பதவியேற்பு விழாவில் மக்கள் முன்னிலையில், மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்க உள்ளாா். இதில் பிற மாநிலங்களின் முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை”எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மக்களுக்கு ட்விட்டர் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அதில் “ டெல்லி மக்களே உங்கள் மகன் டெல்லியின் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளேன். ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு அவசியம் வந்து உங்கள் மகனை ஆசீா்வதியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

விஐபி

பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமரை சிறப்பு அழைப்பாளராக ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சனிக்கிழமை நடந்த தோ்தல் வெற்றி கொண்டாட்டத்தில் கெஜ்ரிவால் போன்று மஃப்ளா், ஸ்வெட்டா் அணிந்தும், தலையில் கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்தும், மீசை வைத்தும் ஒன்றரை வயது குழந்தை ஆவ்யன் தோமரை அவரின் பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். தோமரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை கவா்ந்தது.

Also Read - எடப்பாடியாரின் லெப்ட், ரைட்டுக்கு மட்டும் கொட்டி கொட்டி கொடுக்குறாங்க... குமுறும் மு.க.ஸ்டாலின்

கிழக்கு தில்லி, மயூா் விஹாரைச் சோ்ந்த அந்தக் குழந்தையின் தந்தையும், ஆம் ஆத்மியின் ஆதரவாளருமான ராகுல் தோமருடன் அந்த குழந்தை வந்திருந்தான்.ஆனால் அன்றைய தினம் கெஜ்ரிவாலை அந்தக் குழந்தை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில்,முதல்வராக கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் குழந்தை ஆவ்யன் சிறப்பு அழைப்பாளராக ஆம்ஆத்மி கட்சி ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளது

click me!