சசிகலா ஆதரவு எம்எல்ஏ அருண்குமார் தப்பிஓட்டம்…விலகுபவர்களின் பட்டியல் தொடருமா?

 
Published : Feb 18, 2017, 07:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
சசிகலா ஆதரவு எம்எல்ஏ அருண்குமார் தப்பிஓட்டம்…விலகுபவர்களின் பட்டியல் தொடருமா?

சுருக்கம்

சசிகலா ஆதரவு எம்எல்ஏ அருண்குமார் தப்பிஓட்டம்…விலகுபவர்களின் பட்டியல் தொடருமா?

எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். அவருக்கு தற்போது 123 எம்எல்ஏ க்கள் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டது. சென்னை கூவத்துர் சொகுசுவிடுதியில் அத்தனை எம்எல்ஏ க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று எடப்பாடி தனது பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பதவி இழக்க நேரிடும். இந்நிலையில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண் குமார் கூவத்துர் விடுதியில் இருந்த நேற்று நள்ளிரவு தப்பி ஓடிவந்துவிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். சசிகலா, தினகரன் போன்ற தலைமையை விரும்பவில்லை என தெரிவித்தார்.

அங்கிருந்து தப்பிவந்த அருண்குமார் உடனடியாக சொந்த ஊர் திரும்பினார்.இன்று நடைபெறும் வாக்கெடுப்பை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

இன்று பெரும்பான்மையை நிருபிப்பதற்கு 117 பேர் தேவை என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எண்ணிக்கை 122ஆக குறைந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு